செய்திகள்

தம்பி விஜய் மறந்துட்டீங்களா? - 'மிசா' செய்கை சர்ச்சைக்கு மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் பதிலடி!

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் உங்கள் வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

காவலாளியை மிரட்டி செல்போன், வாலிபரைத் தாக்கி பைக் பறிப்பு : தூத்துக்குடி வாலிபர்கள் 3 பேர் கைது!

நள்ளிரவில் காவலாளியிடம் செல்போனைப் பறித்துக் கொண்டு, மற்றொரு நபரைத் தாக்கி இருசக்கர வாகனத்தைக் கடத்திச் சென்ற தூத்துக்குடி வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டின் மாடிப் படியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு!

புதூர் அருகே வீட்டின் மாடிப் படியிலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த மூதாட்டி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி : தவெக தலைமையில் புதிய அணி உதயம்!

தவெக தலைமையில் தமிழ்நாட்டில் உருவான புதிய கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது.

திருநெல்வேலியில் இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் வெளியிட்ட வாலிபர் கைது

திருநெல்வேலியில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிவாளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்ட பழையபேட்டையைச் சேர்ந்த வாலிபரைச் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தூத்துக்குடியில் 425 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வடமாநிலத்தவர் உட்பட 3 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 425 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் காரில் கடத்தி வந்த 3 பேரைக் கைது செய்தனர்.

திருமண மண்டப உரிமையாளர் வெட்டிக்கொலை: மகள் கண்முன்னே 4 பேர் கும்பல் வெறிச்செயல்!

டியூஷன் மையத்திற்கு மகளை அழைக்கச் சென்ற திருமண மண்டப உரிமையாளர், மகள் கண்முன்னே 4 பேர் கொண்ட மர்மக் கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கல்லிடைக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் செப்.12-ல் தேசிய மக்கள் நீதிமன்றம் : மாவட்ட முதன்மை நீதிபதி அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் வருகிற 12-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடியில் போதைக் கும்பல் அட்டகாசம்: இரவு நேர ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்துமா காவல் துறை?

தூத்துக்குடி மாநகரில் மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரியும் போதைக் கும்பல் ஒன்று, பொதுமக்களிடம் வம்பு இழுத்துத் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை!

விவசாயியிடம் நில அடங்கல் வழங்க ரூ. 2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

திரைப்பட வெளியீட்டில் ரூ.28 லட்சம் மோசடி : இயக்குனர், விநியோகஸ்தர் மீது எஸ்பியிடம் புகார்!

உயிர் மூச்சு' திரைப்படத்தை வெளியிட ரூ. 28 லட்சம் மோசடி செய்ததாக இயக்குனர், விநியோகஸ்தர் மீது தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.