இது குறித்து மாவட்டமுதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான சுபாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் சுபாதேவி தலைமயில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.

தூத்துக்குடியில் 5 அமர்வுகளும், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரில் தலா 2 அமர்வுகளும், விளாத்திகுளம், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் தாலுகாவில் தலா ஒரு அமர்வும் ஆக மொத்தம் 15 அமர்வுகள் நடக்கின்றன.

இதில் அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள் (மீண்டும் இணைந்து வாழுதல்), வங்கிக் கடன் வழக்குகளும், குற்றவியல் கோர்ட்டுகளில் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகளும் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன.

எனவே தேசிய மக்கள் நீதிமன்றம் வழக்காடிகள், எதிர் வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.