தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு, பொதுத்துறை, தனியார் மற்றும் தொழில் நிறுவனங்கள் பிடித்தம் செய்யப்பட்ட தொழில்வரியை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 (அமல் 13.04.2023) பிரிவு 117-B மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 275(2)-ன் படி, ஒரு நகராட்சிக்குள் தொழில், வர்த்தகம், வாழ்க்கைத் தொழில் அல்லது வேலையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நபரும் மாநகராட்சிக்கு அரையாண்டு வரி செலுத்தக் கடமைப்பட்டவர்களாவர்.
அரையாண்டு வருமானம் மற்றும் தொழில்வரி வீதம்:
அரையாண்டு வருமானம் மற்றும் தொழில்வரி (ரூபாயில்)
1. 21,000 வரை 0
2. 21,001 முதல் 30,000 வரை 159
3. 30,001 முதல் 45,000 வரை 402
4. 45,001 முதல் 60,000 வரை 791
5. 60,001 முதல் 75,000 வரை 1192
6. 75,001-க்கும் மேல் 1250
பிடித்தம் செய்யப்பட்ட தொழில்வரியை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தூத்துக்குடி மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தொழில்வரியைப் பிடித்தம் செய்து செலுத்தத் தவறினால், தமிழ்நாடு நகராட்சி உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 ஆகியவற்றின் கீழ் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

