தூத்துக்குடி நந்தகோபாலபுரம் 70-ஆவது தெருவைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் கந்தையா (48). இவர் கடந்த 5-ஆம் தேதி புதுக்கோட்டையில் உள்ள தனது தாயார் ஜெயாவைப் பார்த்துவிட்டுத் தூத்துக்குடி திரும்பியுள்ளார்.
அப்போது, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகத் தானாகவே கீழே விழுந்துள்ளார். இதில் காயமடைந்த கந்தையா, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கந்தையா, பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், மத்தியபாகம் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

