இவ்விழாவிற்கு உலக தமிழ் சங்க நிறுவனத் தலைவர் வி.ஜி. சந்தோசம் தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் அரங்கம் முன்பு அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து , மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திருவள்ளுவரின் சிறப்புகள் குறித்து பேசினார். பள்ளி தாளாளர் அருள்ராஜ் பீட அர்ச்சிப்பு செய்தார்.
விழாவில் கோவில்பட்டி நகர மன்ற தலைவர் (பொ) ஆர்.எஸ். ரமேஷ், ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ஜி. ரமேஷ், தொழிலதிபர் வி.எஸ். பாபு, மருத்துவர் கார்த்திகேயன், கீழ ஈரால் டான் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் தமிழ் துறை தலைவர் ஜெயந்தி கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்ஸ் ஜான் வரவேற்றார். நிறைவாக ஆசிரியர் மெர்சி நன்றி கூறினார்.

