தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம், புதூர் எஸ்.ஆர். நாயுடு தெருவைச் சேர்ந்தவர் மகாதேவன் மகள் பானுமதி (70). இவர் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தனது வீட்டின் மாடிப் படியில் இருந்து எதிர்பாராத விதமாகத் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த பானுமதியை உடனடியாக மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

