செய்திகள்

செவிலியர் தேர்வு எழுதச் சென்றபோது விபத்தில் மணப்பெண் உயிரிழப்பு - மணமகன் படுகாயம்!

நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில், வருங்கால கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மணப்பெண் விபத்தில் சிக்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை: 2 தேசிய விருதுகளை வென்று அசத்தல்!

மும்பையில் நடைபெற்ற விழாவில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்திற்கு 2 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தின் 55-வது எஸ்பி-யாக அன்ஷுல் நாகர் ஐபிஎஸ் பொறுப்பேற்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தின் 55-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அன்ஷுல் நாகர் ஐபிஎஸ் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரிகள்!

நாகர்கோவில் பேருந்து நிலையம் அருகே விதிமுறைகளை மீறிய உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறையினர் ரூ.10,000 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர்.

திருச்செந்தூரில் பிரம்மாண்ட காத்திருக்கும் அறை பயன்பாட்டிற்கு வந்தது - பக்தர்கள் மகிழ்ச்சி!

திருச்செந்தூர் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான காத்திருப்புக்கூடம் தற்போது பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளது.

கிண்டியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் : முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!

கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் வேண்டும் என தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களை வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் – விஞ்ஞானி காளிராஜ் பேச்சு!

"மாணவர்கள் சமூக வலைதளங்களை தங்களுடைய வளர்ச்சிக்கும் தொழில் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வேண்டும்" என்று விஞ்ஞானி காளிராஜ் அறிவுரை வழங்கியுள்ளார்.

போதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர், நடத்துநர் உட்பட 4 பேருக்கு ரூ.45,000 அபராதம் - தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடியில் மதுபோதையில் மினி பஸ் மற்றும் ஆட்டோக்களை இயக்கிய 4 பேருக்கு போக்குவரத்து காவல்துறையினர் ரூ.45,000 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் விபத்து வழக்கில் ரூ. 4 லட்சம் நஷ்ட ஈடு - மக்கள் நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடியில் சாலை விபத்தில் படுகாயமடைந்த நபருக்கு ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாடகைக்குக் கிடைக்கும் வாய்கள்! - சமூக வலைதளத்தில் வைரலாகும் டி.எஸ்.ஆர். சுபாஷ் பதிவு!

இன்று பலர் தங்களது கருத்துகளை 'வாடகைக்கு விட்டு', அன்றைய நாளுக்கான கூலியைப் பெற்றுத் திரும்பும் நிலை உருவாகியுள்ளது என்று டியூஜே தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளருக்கு சிறந்த அறிவியல் பரப்புரையாளர் விருது

திருச்சி ராமன் ரிச்சர்ச் பவுண்டேஷன் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகனுக்கு சிறந்த அறிவியல் பரப்புரையாளருக்கான விருது வழங்கப்பட்டது.