ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 1993-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி பிறந்தார். பி.ஏ. பட்டதாரி. 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, 2022-ஆம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் (IPS) அதிகாரியாகத் தேர்வானார்.
2024-இல் தனது பயிற்சியை முடித்து, மதுரை திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளராக (ASP) தனது பணியைத் தொடங்கினார். தொடர்ந்து 2026 ஜூன் மாதத்தில் எஸ்பி-யாக பதவி உயர்வு பெற்று, திருநெல்வேலி மாநகர மேற்குப் பகுதி சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக சிறப்பாகப் பணியாற்றினார். தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுள்ளார்.

