தமிழக முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை உரையில் திமுக தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தியாகங்கள் கொச்சைப்படுத்தப்பட்டதாகக் கூறி, அதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எம்எல்ஏக்கள் ஜிவி மார்க்கண்டேயன் , கருணாநிதி, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், முன்னாள் எம்எல்ஏ சண்முகைய்யா, மற்றும் நிர்வாகிகள் முரளிதரன், அஜிதா ஆக்னல் உள்பட திமுகவினர் திரளாகக் கலந்து கொண்டனர்.