திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அறிவியல் பேராசிரியர்களால் நடத்தப்படும் ராமன் ரிச்சர்ச் பவுண்டேஷன் சார்பில் அறிவியலின் மேம்பாட்டிற்கு சாதனை படைக்கும் வருடந்தோறும் 2 பேராசிரியர்கள் மற்றும் 1பேராசிரியர் அல்லாத நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

நெல்லை சாராள் தக்கர் கல்லூரியில் அண்மையில் நடந்த செயல் திறன் மிக்க பொருட்களில் சமீத்திய முன்னேற்றங்கள் எனும் தலைப்பில் ரிடீம்ஸ்-26 என்ற பன்னாட்டு கருத்தரங்கில் தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளரும் கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவருமான முத்துமுருகனுக்கு சிறந்த அறிவியல் பரப்புரையாளருக்கான விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற முத்து முருகனை ராமன் ரிச்சர்ஷ் பவுண்டேஷன் தலைவர் ரவிச்சந்திரன், சாராள் தக்கர் கல்லூரி முதல்வர் பெல்சியா கிளாடஸ் சத்யாதேவி,துணை முதல்வர் ஜெயபிரபா,இயற்பியல் பேராசிரியர் புஷ்பலதா கிரேஸ்லின்,கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் விநாயக ரமேஷ்,முத்துச்செல்வம்,உள்ளிட்ட சங்க நிர்வாகிகள்,தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகள் கமலா ராணி,முத்துசாமி,உள்பட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.