தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு திட்டப் பணிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் இன்று (27.10.2026) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் தெரிவிக்கையில் "தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள உப்பாத்து ஓடையினை தூர்வாரும் பணிகளையும், அத்திமரப்பட்டி கிராமத்தில் உள்ள கோரம்பள்ளம் குளத்தில் இருந்து 24 மதகு வழியாக உபரிநீர் செல்லும் கால்வாய் பகுதிகளையும், குமாரகிரி ஊராட்சி, கூட்டாம்புளி பாலம், பெட்டைக்குளத்தினையும், சாயர்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இருவப்பபுரம் கிராமத்தில் உள்ள பேய்குளத்தினையும், பெருங்குளம் பேரூராட்சிக்குட்பட்ட பண்டாரவிளை கிராமத்தில் உள்ள பெருங்குளத்திற்கு வரும் நீர்வரத்து கால்வாய் பகுதிகளையும், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவகளை குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் பகுதிகளையும், பேரூர் குளம், கஸ்பா குளம் பகுதி, சேதமடைந்த கஸ்பா குளப்பகுதி (ஸ்ரீவைகுண்டம்-வல்லநாடு பத்மநாபபுரம் இணைப்பு சாலை) பகுதி, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதி ஆகிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாய்வு வெள்ளம் பாதிக்கப்படும் தாழ்வான பகுதிகள், குளத்திற்கு வரும் வரத்து கால்வாயினை சீரமைக்கும் பணிகள், பேரிடர் மீட்பதற்கான உபகரணங்களான மின்மோட்டார், மணல் மூட்டைகள், குளங்களில் உள்ள கரைகள் மற்றும் மதகு பகுதிகள் ஆகியவை சீரமைக்கப்பட்டுள்ளது ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து நிலையிலும் தயார்நிலையில் உள்ளோம் என மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்களுடன் ஆய்வு செய்து வருகிறோம். குறிப்பாக 2023ஆம் ஆண்டு உடைப்பு ஏற்பட்ட கஸ்பாகுளம், பெருங்குளம், கோரம்பள்ளம் குளங்களை ஆய்வு மேற்கொண்டு, அனைத்து குளங்களிலும் நிரந்தர மறுசீரமைப்பு பணிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும், மேலும் கூடுதலாக எங்கு எல்லாம் என்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்தும் மாண்புமிகு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அவ்வபோது ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் உடனடியாக மறுசீரமைப்பு செய்ய வேண்டிய பகுதிகளில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. தொடர்ந்து நீர்வளத்துறை சார்பில் ரூ. 1 கோடி மற்றும் இதரத் துறைகளின் சார்பில் ரூ. 3 கோடி என ரூ. 4 கோடி மதிப்பீட்டில் உபரிநீர் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஏனெனில் வெள்ளம் வரும் போது உபரிநீர் கால்வாய்களில் தண்ணீர் தடையில்லாமல் செல்வதற்காகவும், உடைப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீரை சேமிப்பதற்கும், அதேப்போல் வெள்ளம் ஏற்படும் பொழுது மாவட்டத்தை வெள்ளங்களிலிருந்தும் பாதுகாப்பதற்கும் நீர்வளத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

எனவே, ஒவ்வொரு குளங்களிலும் தண்ணீர் சேமிப்பதற்கும், வெள்ளம் ஏற்படும் நேர்வுகளில் குளங்களிலிருந்து தண்ணீரை திறந்து விடுவதற்கான சூழ்நிலையும் ஏற்படும். அதற்கேற்ற போல் சமநிலையோடு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடந்த 1 வருடங்களில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் அடிப்படையில் மதகுகள் சீரமைத்தல் மற்றும் இதர பணிகளும் மேற்கொள்ளப்படும். வடகிழக்கு பருவமழையை மேற்கொள்வதற்காக அனைத்து நிலையிலும் தயார் நிலையில் உள்ளோம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தெரிவித்துள்ளார்.

srinathAivu3.jpg

ஆய்வின் போது, தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ், செயற்பொறியாளர், நீ.வ.து, கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநில கோட்டம் தங்கராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், உதவி பொறியாளர்கள் அஜ்மீர்கான், சதீஷ் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.