தூத்துக்குடி புத்தகம் வாசிப்பு மன்றம் தூய மரியன்னை கல்லூரி வரலாற்றுத் துறையும் சார்பில் தீபாவளி வாழ்த்து அட்டைகள் தயாரித்து எழுதி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பல ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளிக்கு முன்னதாக வாழ்த்து அட்டைகள் எழுதி ஒவ்வொருவரும் தங்களது உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பினர். பல ஆண்டுகளாக கடிதம் வாழ்த்து அட்டைகள் எழுதும் பழக்கம் குறைந்து போனதால் வாட்ஸ் அப் மூலமாக வாழ்த்துக்களை அனுப்புகின்றனர்.
இந்த நிலையில், மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் நிகழ்வு புத்தக வாசிப்பு மன்றம் மற்றும் கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவிகள் தாங்களே வாழ்த்து அட்டைகளை தயாரித்து எழுதி கொண்டு வந்திருந்தனர்.

கொண்டு வந்திருந்த அனைத்தும் நன்றாக இருந்ததால் அனைவருக்கும் புத்தகம் வாசிப்பு மற்றும் சார்பில் புத்தகம் பரிசாக கல்லூரி முதல்வர் அருட்சகோதரி சிபானாவால் வழங்கப்பட்டது வரலாற்று துறை பேராசிரியர் மற்றும் புத்தகம் வாசிப்பு மன்ற தலைவர் எழுத்தாளர் ஆ.மாரிமுத்து மற்றும் அமைப்பாளர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

