செய்திகள்

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் கைவரிசை : தாய், மகளை மடக்கிப் பிடித்த பயணிகள்!

அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் பணப்பையைத் திருடிக்கொண்டு தப்பியோட முயன்ற கோவில்பட்டியைச் சேர்ந்த தாய் மற்றும் மகளைப் பயணிகள் விரட்டிப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

கனடா பெண்ணுக்கு நிர்வாணப் பூஜை செய்து மிரட்டல்: தென்காசியை சேர்ந்த கிளி ஜோதிடர் கைது!

கனடா நாட்டுப் பெண்ணை நிர்வாணப் பரிகாரப் பூஜை செய்ய வைத்து, மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற தென்காசியைச் சேர்ந்த கிளி ஜோதிடரை காவல்துறையினர் கைது செய்தனர்.

குற்றாலத்தில் வாட்டும் வெயில்: அருவிகளில் தண்ணீர் குறைந்தது -சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் வாகனம் மோதி பரிதாப பலி — நெல்லை அருகே சோகம்!

திருச்செந்தூருக்கு நடைபயணம் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் பக்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தனியார் கல்லூரி பேருந்து மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பரிதாப பலி: ஓட்டுநர் கைது!

ராசிபுரம் அருகே கல்லூரிப் பேருந்து மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை: போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு!

திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டமன்றத்தில் விவாதமின்றி திட்டங்கள் அறிவிப்பதா? தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தித் தவெக அரசு நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பரத் திட்டங்களை அறிவித்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகச் சாடியுள்ளார்.

சகோதரரைத் தாக்கிய வழக்கு: புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜர்!

சொந்தச் சகோதரரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாகத் தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

பள்ளி மாணவியருக்குப் பாலியல் தொல்லை: பாதிரியார் போக்ஸோ சட்டத்தில் கைது!

சமயபுரம் அருகே பள்ளி மாணவியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்துவப் பாதிரியாரும் பள்ளி தலைமை ஆசிரியருமான ஜெயராஜ் என்பவரைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

எத்தகைய சூழலிலும் தர்மத்தின் வழியில் வாழ வேண்டும்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து!

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தின்படி எத்தகைய சூழலிலும் தர்மத்தின் வழியில் மன உறுதியுடன் வாழ வேண்டும் என முதலமைச்சர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாலிடெக்னிக், ஐடிஐயில் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பாலிடெக்னிக், ஐடிஐயில் சேர்க்கைக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதால் உயர்கல்வி தொடர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.