செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: தவெக அரசின் நிலைப்பாட்டிற்கு பெ.சண்முகம் கண்டனம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான அதிகாரிகள் மீது உறுதியான சட்டப்பூர்வ நடவடிக்கை மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுலா விருதுகளுக்கு செப்.30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக இந்த ஆண்டிற்கான “தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2026”-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.

ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

தமிழகத்தில், வரும் 15-ஆம் தேதி முதல் இணையவழியில் ஓட்டுநர் உரிமம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி நடைமுறைக்கு வரும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

உமைய பார்வதி அம்மன் கோவில் கொடை விழா: அன்னதானத்தை கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ உமைய பார்வதி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கான அன்னதான நிகழ்வை முன்னாள் அமைச்சர் பெ. கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

போலி பட்டா தயாரித்து கிராம சமுதாய சங்க நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவருக்கு 2 ஆண்டுகள் சிறை!

கிராம சமுதாய சங்கத்திற்குச் சொந்தமான நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் தனது தந்தையின் பெயருக்குக் கூட்டுப் பட்டாவாக மாற்றிய நபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓட்டப்பிடாரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மனைவியுடன் குடும்பத் தகராறில் விபரீதம்: வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!

காடல்குடி அருகே குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் காட்சிப் பொருளாக இருக்கும் மின்விசிறிகள்: பொதுமக்கள் கடும் அவதி!

தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் மின்விசிறிகள் இயங்காமல் காட்சிப் பொருளாக உள்ளதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் கடுமையான அசௌகரியத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்தைத் தாண்டினால் விஜய்யை யாருக்குமே தெரியாது: தேமுதிக எம்.பி. சுதீஷ் பேட்டி!

பிரதமர் வேட்பாளர் பட்டியலில் விஜய் இருக்க வாய்ப்பே இல்லை, தமிழகத்தைத் தாண்டினால் அவரை யாருக்குமே தெரியாது என்று தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே. சுதீஷ் விமர்சித்துள்ளார்.

நெல்லையில் அதிர்ச்சி: பெண்ணை நிர்வாணப் படம் எடுத்து நகை பறித்த 3 பேர் கைது!

நெல்லையில் பெண்ணைக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கி, ஆடைகளைக் களைந்து நிர்வாணப் படம் எடுத்து நகை பறித்துச் சென்ற 3 பேரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பரிதாப பலி: முறப்பநாடு அருகே சோகம்!

முறப்பநாடு அருகே அனவரதநல்லூரில் வீட்டின் மின்சார மோட்டாரை நகர்த்திய போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.