திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அதுல் (29) என்பவர் மார்த்தாண்டம் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் குற்ற எண் 404/2026 (பிரிவுகள் 103(1), 238(A), 249(A) BNS) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இக்கொலை வழக்கில் தொடர்புடைய அஜித் (23), பிரவீன் (31), சையது அலி (29), நிதிஷ் (24) ஆகிய 4பேரும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் சட்டம் ஒழுங்கிற்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதாககுண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.
எஸ்பி-யின் பரிந்துரையை ஏற்று, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் தடுப்புக் காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

