தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி அருகே உள்ள P. ஜெகவீரபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் விஜயகாந்த் (40). இவரது மனைவி ராஜேஸ்வரி (34). கணவன் - மனைவி இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுச் சண்டை நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் ஜெகவீரபுரம் கிராமத்திற்கு வடக்கே காட்டுப்பகுதியில் உள்ள கருவேல மரத்தில் விஜயகாந்த் கயிற்றினால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார். இதைப் பார்த்த ஊர் பொதுமக்கள் உடனடியாக காடல்குடி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.