தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்டப் பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், குற்றச் சம்பவங்களைத் தடுத்தல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகளை மேற்கொள்ள நீல் ஷர்மா இன்று பொறுப்பேற்றுள்ளார்.
புதிய காவல் உதவி கண்காணிப்பாளர் நீல் ஷர்மாவுக்கு உட்கோட்டத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கோவில்பட்டி உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் அச்சமின்றி வாழும் சூழல் உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

