முன்னதாக கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு, கோவில் தர்மகர்த்தா, நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் பங்கேற்று அவர் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் பக்தர்களிடையே பேசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், "என் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்துள்ள இப்பகுதி மக்களுக்கும், கோவில் நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அன்பான வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆலயக் கொடை விழாவும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் அனைத்து ஆன்மிக நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கான அன்னதான நிகழ்வைத் தொடங்கி வைத்து, அவரே நேரில் உணவு பரிமாறினார். இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், முத்துக்குளியல் தொழிலாளர்கள் சங்க தலைவர் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முத்தரையர் ஊர் தர்மகர்த்தா சந்தன்ராஜ், தலைவர் கருப்பண்ணன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பாலு, மாதவநாயர் காலனி ஊர் தலைவர் சந்தன செல்வன், தர்மகர்த்தா ரவி, பொருளாளர் ரூபன், சுவாமி விவேகானந்தர் காலனி தர்மராஜா, நிர்வாகிகள் கணேசன், முருகன், மணிராஜ், புதிய துறைமுகப் பகுதி நிர்வாகிகள் அண்ணாதுரை, மோகன், கௌதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.