» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா!
வெள்ளி 21, ஜூன் 2024 4:08:09 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது.
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண் டும் சர்வதேச யோகா தினத்தினு டைய கருத்துப் பொருளாக "தனி மனிதருக்கும் யோகா சமுதாயத் திற்கும் யோகா" என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டுநடத்தப்பப்ட்ட யோகா சன நிகழ்ச்சிகளை பள்ளியின் தலைமையாசிரியர் குணசீலராஜ் துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜேசன் சாமுவேல் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் தனபால் மாணவர்களுக்கு யோகாசனம் கற்றுக் கொடுத்தார்.
மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் பெரிய கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களும் தேசிய மாணவர் படை மாணவர்களும் மற்றும் பிற வகுப்பு மாணவர்களும் திரளாக கலந்து கொண்டு யோகாசனம் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் ஜெய்சன் பாபு ஆகியோர் செய்திருந்தனர். சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொண்ட மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுதாகர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி: மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
புதன் 16, ஏப்ரல் 2025 11:03:04 AM (IST)

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)
