» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

புதுக்கோட்டையில் நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாம்!

திங்கள் 7, அக்டோபர் 2024 12:40:28 PM (IST)



புதுக்கோட்டையில் டி.டி.டி.ஏ., பி.எஸ். பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின்  நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பவானி நகர், இந்திரா நகர், மகாராஜா நகர் பகுதியில் T.D.T.A பி.எஸ்.பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்டத்தின் மாணவர்களுக்கான சிறப்பு முகாம் ஏழு நாட்கள் நடைபெற்றது. விழாவிற்குத் தலைமை ஆசிரியர் சோப்பார் ஜோதி பால்  முகாமை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் சிறப்புரை ஆற்றினார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ஜெ.திவ்யா பிரியதர்ஷினி எஸ்தர் வரவேற்புரை நல்கினார். 

சிறப்பு விருந்தினர்களாய் உதவித் தலைமை ஆசிரியை பெ.அன்னாள் ஆனந்தக்கனி, வழக்கறிஞர் தங்கராஜ் காந்தி, ICTC Adolescent கவுன்சிலர் பானுமதி நாச்சியார், பேராசிரியர் ஜாண்சன் நவமணி, ஆங்கில ஆசிரியை ஜெ.ஜாய் ஞானதீபம் ராஜகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவர்களை ஊக்கப்படுத்தி வாழ்த்துரை வழங்கினார்கள். உதவித் திட்ட அலுவலர்கள் ஆஷா ஜெபமேரி மற்றும்ஹர்லின் ஜெபசீலி ஆகியோர் நன்றியுரை நல்கினர்.

"டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு" என்னும் தலைப்பில் நடைபெற்ற சிறப்பு முகாமில் சுற்றுப்புறத் தூய்மை செயல்பாடுகள், மழைநீர் சேகரிப்பு, தூய்மையான குடிநீர், சரிவிகித உணவு, சிறுசேமிப்பு மற்றும் சேமிப்பின் முக்கியத்துவம், போதைப் பொருள் தடுப்பு சார்ந்த விழிப்புணர்வு, சட்டக்கல்வி விழிப்புணர்வு, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சார்ந்த மஞ்சள் பை விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில் அறிவுரைகள் வழங்கப்பட்டன. சாலைகளில், தெருக்களில், ஆலயம், கோவில், மற்றும் பள்ளிக் கூடங்களில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory