» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்!
வியாழன் 20, பிப்ரவரி 2025 5:51:03 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் "பூமி இழந்திடேல்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் அக தர நிர்ணயக் குழு மற்றும் சுற்றுச் சூழல் குழு இணைந்து இளங்கல்வியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு "பூமி இழந்திடேல்” என்ற தலைப்பில் சிறப்புரை நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் த.கனகராஜ் வரவேற்றுப் பேசினார்.
பேராசிரியர் சு.பிரேம லதா சிறப்புரையாளர் கோவை க.சதாசிவம், சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர், கதைசொல்லி ஆவணப்பட இயக்குநர் மற்றும் பேச்சாளர் அவர்களை அறிமுகம் செய்தார். சிறப்புரையாளர் தனது உரையில் விலங்குகள், பறவைகள் மற்றும் மனிதர்கள் உயிர்வாழ ஆதாரமாக இருக்கும் பூமி மற்றும் தண்ணீரின் முக்கியத்துவத்தை தகுந்த உதாரணங்கள் மற்றும் கதைகள் மூலமாக விளக்கி சிறப்புரையாற்றினார்.
பொருளறிவியல் உதவிப் பேராசிரியர் சே.குரு வாசுகி நன்றியுரை கூறினார். முதலாமாண்டு மாணவ ஆசிரியர்கள் ச.மதுமிதா மற்றும் மா.கவிதா ஆகியோர் விழா நிகழ்வுகளை பேராசிரியர்களுடன் இணைந்து ஒன்றிணைத்தனர். விழாவினை தமிழ் மாணவ ஆசிரியர் எ.பெபினா மற்றும் அங்கிலத்துறை மாணவ ஆசிரியர் அ.தெபோரால் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவில் 85 மாணவ ஆசிரியர்கள் மற்றும் 11 பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


