» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!

சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் மன்ற விழாவில் பள்ளி மாணவர்கள் அறிவியல் படைப்புகளை காட்சியகப்படுத்தி அசத்தினர்.
 
விழாவிற்கு தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் தனபால் ஆரம்ப ஜெபம் செய்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். இவ்விழாவில் பள்ளியின் அறிவியல் ஆசிரியை ஜெயந்தி சுபாஷினி, தேசிய அறிவியல் தினம் குறித்தும், நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சர். சி.வி. ராமன் மற்றும் அவர் கண்டுபிடித்த ராமன் ஒளி விளைவு குறித்தும் விளக்கப் படங்களுடன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 

மாணவர்கள், வரும் காலத்தில், சிறந்த விஞ்ஞானிகளாக வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில், ஏழாம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் உருவாக்கியிருந்த அறிவியல் படைப்புகளான கோள்களின் இயக்கம், லேசர் ஒளி செயல்பாடு, தானியங்கி வாகனத்தின் மாதிரி இயக்கம், கலங்கரை விளக்கத்தின் மாதிரி, ராக்கெட் மாதிரி, ஆகியவற்றின் செயல்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக அறிவியல் ஆசிரியர் ஐசக் சந்தோஷ் பிரபு நன்றி கூறினார்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் ஜென்னிங்ஸ் காமராஜ், அறிவியல் ஆசிரியை சோபியா பொன்ஸ், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory