» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா

வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)



தூத்துக்குடி மாவட்ட அளவிலான தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி பெற்ற மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில்  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மன்றத் தேர்வு மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. தேர்வில், மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். 

அதில் மாணவர் பாலச்சந்திரன் முதலிடத்தையும்,  மாணவர்கள் மகாராஜா, அகஸ்டின் மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் இரண்டாமிடத்தையும் பெற்று சிறப்பு சேர்த்துள்ளனர்.  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் குணசீலராஜ் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் திருக்குறள் புத்தகங்களை வழங்கி பாராட்டினார். 

நிகழ்ச்சியில், உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம், தமிழ் ஆசிரியர்கள் ஆபிரகாம் இமானுவேல், எட்வின், வின்ஸ்டன் ஜோஸ்வா, அம்புரோஸ் சுகிர்தராஜ், தமிழ் ஆசிரியைகள் செல்வம் மற்றும் ரூபி பொற்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் செய்திருந்தார்.வெற்றி பெற்ற மாணவர்களை பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory