» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

செக்காரக்குடி அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!

புதன் 4, செப்டம்பர் 2024 5:33:24 PM (IST)



தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பையா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கே. முத்துலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் எம்.ஏ. தாமோதரன் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். சிறப்பு விருந்தினராக செக்காரக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ஐ. இராமலெட்சுமி கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதிப்பால் காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விளக்கவுரையாற்றி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். 

பேரணியானது பேருந்து நிலையம், முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. அதன் பின்னர் சுற்றுச்சூழலை பாதுகாத்து, நாட்டின் பசுமை போர்வையை மேம்படுத்த அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பேரணியில் பள்ளியின் ஆசிரியர்கள் சிவதேவி, அருள், சந்திரலேகா, அன்புசெல்வி மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை செக்காரக்குடி பால் கூட்டுறவு சங்கத் தலைவர் ஐய்யம்பெருமாள் சிறப்பாக செய்திருந்தார். நிறைவாக பள்ளியின் பசுமை படை ஆசிரியர் எம். ஆனந்தராம சுப்பிரமணியன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory