» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அரசு பள்ளி ஆசிாியருக்கு பசுமை முதன்மையாளர் விருது

செவ்வாய் 3, செப்டம்பர் 2024 11:21:52 AM (IST)



கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிாியருக்கு தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாாியம் சாா்பில் பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஜீன் 12ம் தேதி நடைபெற்ற சிறந்த பசுமை முதன்மையாளர் விருதுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிாியர் சக்திவேல் உள்பட 7 பேர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்த முதன்மையாளர் தேர்வு நடைபெற்றது. 

மீன் கழிவுகளின் இருந்து பதப்படுத்தப்பட்டு திரவ வடிவத்தில் எடுக்கப்பட்ட மீன் அமீலத்தில் 50மிலி எடுத்து அதோடு 10 லிட்டர் தண்ணீர் கலந்து  செடிகளின் மீது தௌித்தால் அதிக மகசூல் கிடைக்கும் என்பதை தன்னுடைய தோட்டத்தில் பாிசோதனை நடத்தி வெற்றி கண்டதோடு, நிறுத்திவிடாமல் அந்த மீன் அமிலங்களை பிற இடங்களில் நடப்படும், மரக்கன்றுக்களுக்கும் பசுமை பூங்காக்களுக்கும் ெதளிக்கப்பட்டு வருகிறது என்பது புதுமையான பசுமை தயாாிப்பாகும். 
   
மேலும் வருடந்தோறும் 50 ஆயிரம் மரகன்றுகள் வரை ஈஷா மையத்தோடு இணைத்து கருங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பஞ்சாயத்தை சார்ந்த கிராம மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறார். இளம் பருவத்தை சார்ந்த மாணவர்கள் தனது செல்போனில் பாா்த்து பொழுதை போக்காமலும், தன்னுடைய வாழக்கையை இழக்காமலும், இருக்கும் பொருட்டு தனது விவசாய பெற்றோர்களின் நிலைமையினை புாிந்து கொள்ளும் வகையில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அருகில் உள்ள கிராமங்களில் எல்லையில் உள்ள விவசாய நிலங்களோடு அழைத்து செல்லும் இயற்கை விவசாயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். 

அது போல் கருங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மண்ணில் புதைத்து பல நாட்களாக அப்புறப்படுத்தப்படாமல் இருந்த எண்ணற்ற நெகிழி கழிவுகளை கண்டெடுத்து அதனை மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் தான் வேலைப்பாா்க்கும் கருங்குளம் அரசு பள்ளியில் பசுமை பூங்கா அமைத்து அதில் மருத்துவ குணம் நிறைந்த நித்யகல்யாணி செடி, துதுவளை, கண்டகத்தாி, நொச்சி, கற்பூரவள்ளி, மணத்தக்காளி, மருதாணி, செடிகளும் காய் மற்றும் பழத்தோட்டம் அமைத்து பாரமாித்து வருகிறார். 

மேற்கண்ட இவாின் சேவையை பாராட்டி தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாாியம் சாா்பில் பசுமை முதன்மையாளர் விருது ஆசிாியர் சக்திவேல்க்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் இசக்கியம்மாள், சான்றிதழள் மற்றும் ரூ1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பிரதீப் உடனிருந்தார்.


மக்கள் கருத்து

ManiSep 3, 2024 - 01:14:05 PM | Posted IP 172.7*****

Congratulations sakthivel sir

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory