» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!

திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)



கோவில்பட்டி அருகே உள்ள சாத்தூர் வட்டம் என். சுப்பையாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் முனியப்பன் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் இராஜசேகர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் "நல்ல பிள்ளைகளைப் பெரிதும் உருவாக்குவது வீடா? நாடா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தின் நடுவராக நாடார் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்ஜான் கணேஷ் பணியாற்றினார். 

வீடே என்ற அணியில், விநாயக சுந்தரி, முருகேசன் ஆகியோரும், நாடே என்ற அணியில் கிருஷ்ணன், செல்வம் ஆகி போரும் வாதிட்டனர். முடிவில், நல்ல பிள்ளைகளைப் பெரிதும் உருவாக்குவது நாடே என்ற முடிவினை நடுவர் அறிவித்தார். நிகழ்ச்சியில், முன்னாள் வேளாண் ஆசிரியர் சுரேஷ்குமார், சகாராவைத் தாண்டாத ஒட்டகம் கல்வி நிறுவனர் தினகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இடைநிலை ஆசிரியை காந்திமதி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory