» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
வஉசி கல்லூரியில் ஃபீனிக்ஸ் 2024 கலைப் போட்டிகள்!
சனி 28, செப்டம்பர் 2024 11:26:16 AM (IST)

தூத்துக்குடி வஉசி கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான மாபெரும் இலக்கியக் கலைப் போட்டிகள் "ஃபீனிக்ஸ் 2024" நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகரின் பாரம்பரியமிக்க வ.உ.சிதம்பரம் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான மாபெரும் இலக்கியக் கலைப் போட்டிகள் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. இதில், 9 கல்லூரிகள் சார்பாக 170 போட்டியாளர்கள், பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, Bookmark making, நாடகம், வினாடி வினா, குழுப்பாடல் மற்றும் ஊமை நாடகம் போன்ற போட்டிகளில் பங்கேற்றனர்.
கல்லூரி செயலர் ஏ. பி. சி.வி சொக்கலிங்கம் தலைமை தாங்கி தலைமையுறை ஆற்றினார். ஆங்கிலத்துறை துணைப் பேராசிரியர் ராணி பிரியதர்ஷினி வரவேற்புரை நல்கினார். பேராசிரியர் ஜோக்கிம், புனித சேவியர் கல்லூரி சிறப்புரை ஆற்றினார். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல் பரிசு, வெள்ளி சுழற்கோப்பை மற்றும் பத்தாயிரம் பரிசு தொகை பெற்றது.
திருச்செந்தூர் ஆதித்தனர் கல்லூரி இரண்டாம் பரிசு மற்றும் ஏழாயிரம் பரிசுத் தொகையும், பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி மூன்றாவது இடத்தையும் ஐந்தாயிரம் பரிசுத் தொகையும் பெற்றனர். கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமை தாங்கி தலைமையுறை ஆற்றினார். விஜய் டிவி புகழ் தொகுப்பாளர் மற்றும் நடிகர் V.J ஆண்ட்ரூஸ் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இண்டோனேஷன் பிரைவேட் லிமிடெட் மேலாண்மை இயக்குனர் கல்யாணசுந்தரம், போட்டிக்கான பரிசுத்தொகையும், வெள்ளி சுடற்கோப்பையும் வழங்கி விழாவை சிறப்பித்தார். ஆங்கிலத் துறைத்தலைவி பேராசிரியர் சில்வியா வரவேற்புரை நல்கினார். துணைப் பேராசிரியர் ராணி பிரியதர்ஷினி, ஃபீனிக்ஸ் குறித்த முன்னுரை வழங்கினார். ஆங்கிலத்துறை மாணவர்கள் சார்பாக ஆங்கில நாடகம் ஒன்றை நிகழ்த்தி, ஃபீனிக்ஸ் முன்னோட்ட காணொளி வெளியிட்டனர். நிறைவாக ஆங்கிலத்துறை துணைப் பேராசிரியர் ஆனந்த வைஷ்ணவி நன்றியுரை வழஞ்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)

UnknownSep 29, 2024 - 02:35:31 PM | Posted IP 162.1*****