» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சக்தி வித்யாலயா பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம்

சனி 7, செப்டம்பர் 2024 11:42:30 AM (IST)



தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது.

தாத்தா பாட்டிகள் தினவிழா சக்தி வித்யாலயா பள்ளியில் முதல்வர் ஆ.ஜெயாசண்முகம் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை உதயம்மாள் அனைவரையும் வரவேற்று பேசினார். ஆசிரியை மணிமேகலை தனது உரையில் தாத்தா பாட்டிகளை கௌரவிக்கும் ஒரு கொண்டாட்டமாக முதன்முதலாக அமெரிக்காவில் 1978-ல் தேசிய தாத்தா பாட்டிகள் தினம் செப்டம்பர் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்தநாள் உறவுகளை வலுப்படுத்துதல், குடும்பத்தின் தூண்களாக வயதான நிலையிலும் பேரக்குழந்தைகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வரும் அவர்களை உள்ளன்புடன் பாராட்டும் விதமாக இக்கொண்டாட்டம் நம் பள்ளியில் கொண்டாடுகிறோம்.

தாத்தா பாட்டிகள் அனைவரும் பூக்களை தூவி தனது பேரக் குழந்தைகளை ஆசீர்வாதம் செய்தனர். அதன்பின் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தாத்தா -பாட்டிகள் அனைவருக்கும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பள்ளியின் முதல்வர் ஆ.ஜெயாசண்முகம் பரிசுகளை வழங்கினார்.

விழா நிறைவில் ஆசிரியை கௌரி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ஆசிரியை கிருபா தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை துணைமுதல்வர் ரா.ச.பிரியங்கா செய்திருந்தார்.


மக்கள் கருத்து

MubarakSep 7, 2024 - 01:40:00 PM | Posted IP 162.1*****

இது மாரி parents' day celebration pannuga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory