» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் விவசாயிகள் சங்கத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு விழா!

வியாழன் 4, ஜூன் 2026 8:30:19 PM (IST)



ஆத்தூரில், டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் ரூ.21.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விவசாயிகள் சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வட்டாரப் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, டிசிடபிள்யூ நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியிலிருந்து ரூ.21.50 லட்சம் செலவில் ஆத்தூர் குளம் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்கத்திற்காக, புதிய அலுவலகக் கட்டடம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

இப்புதிய கட்டடத்தின் திறப்பு விழா இன்று (ஜூன் 4) காலை நடைபெற்றது.விழாவில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலையில், டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவித் தலைவர் ஜி. சீனிவாசன் புதிய அலுவலகக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.



இவ்விழாவில், ஆத்தூர் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் செல்வம், செயலாளர் தட்சிணாமூர்த்தி, பொருளாளர் மாதவன், உபதலைவர் வாசிங்டன், உபசெயலாளர் வெள்ளைச்சாமி, மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory