» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர்! – திருச்சி சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கண்டனம்!

வியாழன் 4, ஜூன் 2026 3:40:23 PM (IST)



திருச்சியில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவத்திற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி தனக்குப் பேரதிர்ச்சியையும் அளவிட முடியாத வேதனையையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் இதுபோன்ற கொடூரக் குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கடும் பீதியில் உறைந்து போய் இருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடப்பு சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்துத் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ள கனிமொழி, மாநிலத்தில் நடக்கும் எந்தவொரு சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைக்கும் எதற்குமே பொறுப்பேற்காத இந்த தமிழக அரசு, என்ன தவறு நடந்தாலும் தம்மீது நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற அதீத துணிச்சலில் தான் குற்றவாளிகள் ஊருக்குள் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்களா என்ற நியாயமான கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளதாகச் சாடியுள்ளார்.

மேலும், காவல்துறைக்குத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வர் விஜய், மாநிலத்தில் என்னவானாலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்துத் தொடரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து உரிய விளக்கமளிக்கப் போவதில்லை என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது என வசைபாடியுள்ளார்.

மாநிலத்தின் முதலமைச்சரே அமைதி காத்தாலும், குறைந்தபட்சம் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார் உயர் அதிகாரிகளாவது இந்த கொடூரக் குற்றச் சம்பவம் குறித்தும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் மக்கள் முன் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கனிமொழி தனது எக்ஸ் பதிவில் வலியுறுத்தியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory