» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுபான்மையினருக்கு டாப்கெட்கோ கடனுதவிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!

வியாழன் 4, ஜூன் 2026 3:11:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களின் சுய வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக டாப்கெட்கோ மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இத்திட்டங்கள் குறித்துத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் விரிவான விபரங்களை வெளியிட்டுள்ளார்.   தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினரருக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களான சிறு தொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்வி கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் (ம)  வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறங்களில் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறங்களில் ரூ.8,00,000/- வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும். 

(திட்டம் 1-இன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்) திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டிவிகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20,00,000/-மும், திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டிவிகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/- கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டிவிகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- கடன் வழங்கப்படுகிறது. 

சுய உதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டிவிகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 10% பெண்களுக்கு 8% வட்டிவிகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மை மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுகலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-இன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டிவிகிதத்திலும், திட்டம் 2-இன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டிவிகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டிவிகிதத்தில்  மூலப்பொருட்களான உபகரணங்கள் / கருவிகள் / இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. எனவே, சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் மக்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட / மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்கடன், விராசாத் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது கடன் மனுக்களுடன் சிறுபான்மையினர் மதச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, திட்ட அறிக்கை (கடன் தொகை ரூ.5,00,000/-க்கு மேல் இருப்பின்), கூட்டுறவு வங்கி கோரும் தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது சிறுபான்மையினர் மதச்சான்றிழ் / சாதிச் சான்றிதழ் / வருமான சான்றிதழ் / இருப்பிட சான்றிதழ் நகல், குடும்ப அட்டை / வாழ்விட சான்று, ஆதார் நகல், பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate), கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது அசல் (Original), மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory