» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஏரல் ஜமாபந்தியில் 3 நாட்களில் 189 மனுக்கள் : 11 பேருக்கு பட்டாக்களை வழங்கினார் ஆட்சியர்!
வியாழன் 4, ஜூன் 2026 5:12:39 PM (IST)

ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 3வது நாளாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்விற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) கடந்த ஜூன் 2 முதல் தொடங்கித் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாவது நாளாக அனைத்து வட்டங்களிலும் சம்பந்தப்பட்ட வருவாய்த் தீர்வாய அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பித்தனர்.
ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்விற்கு வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரிடையாகத் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இன்றைய தினம் ஏரல் வட்டம், ஆறுமுகமங்கலம் உள்வட்டத்திற்கு உட்பட்ட நாலுமாவடி, அங்கமங்கலம், சேதுக்குவாய்த்தான் மற்றும் பெருங்குளம் உள்வட்டத்திற்கு உட்பட்ட தன்னூத்து, சிவகளை, கீழ்பிடாகை அப்பன்கோவில், கீழ்பிடாகை கஸ்பா ஆகிய கிராமங்களைச் சார்ந்த பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 70 முக்கிய மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், பெறப்பட்ட மனுக்களைத் தீவிரமாக ஆராய்ந்து அதன் மீது தங்கு தடையின்றி உரிய காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்குக் கறாரான உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதன் மூலம் ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் இதுவரை மொத்தம் 189 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஜமாபந்தியில் புதிய இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டி விண்ணப்பித்த தகுதியான பொதுமக்களுக்கு உடனடித் தீர்வாகப் பட்டாக்கள் தயார் செய்யப்பட்டன. அதன்படி, நேற்று 6 பயனாளிகளுக்கும், இன்று 5 பயனாளிகளுக்கும் என மொத்தம் 11 ஏழைப் பயனாளிகளுக்கு அத்தியாவசிய வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தங்களது கரங்களால் வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம், அலுவலக மேலாளர் (பொது) ரகு, ஏரல் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் வருவாய்த்துறையின் அனைத்து நிலை அலுவலர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ.2.65 லட்சம் பறிமுதல்!
வியாழன் 4, ஜூன் 2026 8:46:08 PM (IST)

டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் விவசாயிகள் சங்கத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு விழா!
வியாழன் 4, ஜூன் 2026 8:30:19 PM (IST)

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி : பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்
வியாழன் 4, ஜூன் 2026 8:16:11 PM (IST)

திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர், உதவி ஆணையர் அதிரடி இடமாற்றம்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு!
வியாழன் 4, ஜூன் 2026 7:41:34 PM (IST)

கழிவுமீன் ஆலைகளை மூடக்கோரி 751-வது நாள் போராட்டம் : புதிய அரசு மீது மக்கள் நம்பிக்கை!
வியாழன் 4, ஜூன் 2026 4:54:32 PM (IST)

தமிழகத்தில் பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர்! – திருச்சி சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கண்டனம்!
வியாழன் 4, ஜூன் 2026 3:40:23 PM (IST)










