» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர், உதவி ஆணையர் அதிரடி இடமாற்றம்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு!
வியாழன் 4, ஜூன் 2026 7:41:34 PM (IST)
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அண்மையில் வைகாசி விசாகத் திருவிழா காலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடத்திய அதிரடி ஆய்வின் போது, அதிகாரிகளின் முன்னிலையிலேயே ரூபாய் 4,000 லஞ்சம் வாங்கிய கொடூர விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து கோவில் அலுவலக கோப்புகளை ஆய்வு செய்த அமைச்சர், பல்வேறு முறைகேடுகள் நடந்ததைக் கண்டுபிடித்துத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இச்சம்பவத்தின் எதிரொலியாகத் திருச்செந்தூர் கோவில் உயர் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படுவார்கள் எனப் பரபரப்பு நிலவிய நிலையில், தற்போது முதற்கட்டமாக இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராகப் பணிபுரிந்து வந்த ராமு உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், சென்னை திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில் இணை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் இணை ஆணையாளராகப் பணியாற்றி வந்த அருணாசலம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் புதிய இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக அதிரடியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உதவி ஆணையரும் பணியிட மாற்றம்:
இதேபோல், திருச்செந்தூர் திருக்கோவிலில் உதவி ஆணையர் மற்றும் நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்து வந்த மெய்வேல், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் உதவி ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து வந்த லோகநாதன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் புதிய உதவி ஆணையர் மற்றும் நேர்முக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் அதிரடி ஆய்வும், அதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் திருக்கோவிலின் மிக முக்கிய உயர் அதிகாரிகள் இருவர் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை, தூத்துக்குடி மாவட்ட ஆன்மீக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ.2.65 லட்சம் பறிமுதல்!
வியாழன் 4, ஜூன் 2026 8:46:08 PM (IST)

டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் விவசாயிகள் சங்கத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு விழா!
வியாழன் 4, ஜூன் 2026 8:30:19 PM (IST)

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி : பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்
வியாழன் 4, ஜூன் 2026 8:16:11 PM (IST)

ஏரல் ஜமாபந்தியில் 3 நாட்களில் 189 மனுக்கள் : 11 பேருக்கு பட்டாக்களை வழங்கினார் ஆட்சியர்!
வியாழன் 4, ஜூன் 2026 5:12:39 PM (IST)

கழிவுமீன் ஆலைகளை மூடக்கோரி 751-வது நாள் போராட்டம் : புதிய அரசு மீது மக்கள் நம்பிக்கை!
வியாழன் 4, ஜூன் 2026 4:54:32 PM (IST)

தமிழகத்தில் பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர்! – திருச்சி சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கண்டனம்!
வியாழன் 4, ஜூன் 2026 3:40:23 PM (IST)










