» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே குட்டையில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 10:24:57 AM (IST)

தூத்துக்குடி அருகே குட்டையில் மூழ்கி தொழிலாளி ஒருவர், உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் மறக்குடி தெருவைச் சேர்ந்தவர் ரத்தினராஜ் மகன் ஜெயராஜ் (41). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகக் கடற்கரைப் பகுதியில் மீன்களுக்கு ஐஸ் போடும் வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம்போல் தனது பணியை முடித்த ஜெயராஜ், தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்டார். 

அப்போது, வழியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்றுள்ளார். அதன்பின்னர், அங்கிருந்த குட்டையில் தனது கால்களைக் கழுவ முயன்றபோது, அவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி குட்டைக்குள் விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் மூழ்கிய ஜெயராஜ் உயிருக்குப் போராடியுள்ளார்.

அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தெர்மல் நகர் காவல் நிலையப் போலீசார், குட்டையில் ஒருவர் விழுந்து கிடப்பதைக் கண்டு உடனடியாக அவரை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் ஜெயராஜைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory