» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 70-வது ஆண்டு திருவிழா: கால் நாட்டு விழாவுடன் பணிகள் தொடக்கம்!

வெள்ளி 1, மே 2026 7:31:49 PM (IST)



விடுதலைப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 70-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்தில் கால் நாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வார இறுதியில் நடைபெறும் இந்தத் திருவிழாவிற்கான கால் நாட்டு விழா, ஆலயக் குழு தலைவர் குளத்தூர் மாஜி ஜமீன்தார் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜப் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகிக்க, வீரசக்கதேவிக்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு 70-வது ஆண்டு திருவிழா வருகிற மே 8, 9, 10 (சித்திரை 25, 26, 27) ஆகிய மூன்று தினங்களில் (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. திருவிழா நாட்களில் தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், நையாண்டி மேளம் மற்றும் இன்னிசைக் கச்சேரி பட்டிமன்றம், கருத்தரங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் முளைப்பாரி எடுத்தல் மற்றும் பழப்பெட்டி காணிக்கை செலுத்துதல் போன்ற வழிபாடுகள் நடைபெற உள்ளன.

மேலும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படையினர் மற்றும் கட்டபொம்மன் இளைஞரணியினர் மூலம் நினைவு ஜோதி தொடர் ஓட்டமாகக் கொண்டு வரப்படும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பொதுமக்களும் முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்பார்கள் என்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory