» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் உழைப்பாளர் தினம்: மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை!
வெள்ளி 1, மே 2026 8:09:53 PM (IST)

தூத்துக்குடியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, ஆயிரம் பிறை பூங்காவில் அமைந்துள்ள தொழிலாளர் சிலைக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொழிலாளர்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று தூத்துக்குடி ஆயிரம் பிறை பூங்காவில் உள்ள தொழிலாளர் சிலைக்கு மேயர் மலர் தூவி தனது மரியாதையைச் செலுத்தினார்.
இந்நிகழ்வில் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி செயலாளர் தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி மற்றும் அந்தோணி மார்ஷலின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவாலயங்களில் சித்ரா பௌர்ணமி விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
வெள்ளி 1, மே 2026 8:43:02 PM (IST)

தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

கொலை வழக்கு: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 1, மே 2026 8:02:02 PM (IST)

ஹெச்.எம்.எஸ். சங்கம் சார்பில் மே தின விழா!
வெள்ளி 1, மே 2026 7:39:11 PM (IST)

சட்டவிரோத மது விற்பனை: வாலிபர் கைது; 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்!
வெள்ளி 1, மே 2026 7:37:00 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 70-வது ஆண்டு திருவிழா: கால் நாட்டு விழாவுடன் பணிகள் தொடக்கம்!
வெள்ளி 1, மே 2026 7:31:49 PM (IST)









