» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)



காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மணிமதிக்கு, பாராட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரேவா பிளாசாவில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, மகிழ்வோர் மன்ற நிறுவனர் டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ் தலைமை வகித்தார். மகிழ்வோர் மன்ற இயக்குனர் ஜான்கணேஷ் முன்னிலை வகிக்க, நாடார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்வின் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் மணிமதி அவர்களுக்குப் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர். 

விழாவில்  பசும்பொன் கல்வி அறக்கட்டளை தலைவர் பரமசிவம், திருவள்ளுவர் மன்ற நிர்வாகிகள் கருத்தப்பாண்டி மற்றும் நம் சீனிவாசன், ஜெ. டிவி கேபிள் ராஜு, முத்தமிழ் மன்ற தலைவர் வரகவி முருகேசன், மற்றும் இலக்கியச் சாரல் தினகரன், கம்பன் கழகச் செயலாளர் சரவணச்செல்வன், கல்லூரி பேராசிரியர் நவநீதன், மகிழ்வோர் மன்ற காப்பாளர்கள் சேர்ம துரை மற்றும் துரைராஜ், ஆசிரியர்கள் அருணாசலம் மற்றும் கனகராஜ், இளையரசனேந்தல் உதவி தலைமை ஆசிரியர் முருகசரஸ்வதி மற்றும் விநாயக சுந்தரி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றுத் தலைமை ஆசிரியரைப் பாராட்டிப் பேசினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory