» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை வழக்கு: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 1, மே 2026 8:02:02 PM (IST)
குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில், திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (22) என்பவர் சம்பந்தப்பட்டிருந்தார். இவரது தொடர்ச்சியான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக, அவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்கக் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் பரிந்துரை செய்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தனைத் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, குலசேகரன்பட்டினம் போலீசார் கோவிந்தனை இன்று கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவாலயங்களில் சித்ரா பௌர்ணமி விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
வெள்ளி 1, மே 2026 8:43:02 PM (IST)

தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

தூத்துக்குடியில் உழைப்பாளர் தினம்: மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை!
வெள்ளி 1, மே 2026 8:09:53 PM (IST)

ஹெச்.எம்.எஸ். சங்கம் சார்பில் மே தின விழா!
வெள்ளி 1, மே 2026 7:39:11 PM (IST)

சட்டவிரோத மது விற்பனை: வாலிபர் கைது; 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்!
வெள்ளி 1, மே 2026 7:37:00 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 70-வது ஆண்டு திருவிழா: கால் நாட்டு விழாவுடன் பணிகள் தொடக்கம்!
வெள்ளி 1, மே 2026 7:31:49 PM (IST)









