» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிவாலயங்களில் சித்ரா பௌர்ணமி விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
வெள்ளி 1, மே 2026 8:43:02 PM (IST)

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சாத்தான்குளம் பகுதியில் உள்ள கட்டாரிமங்கலம், பள்ளக்குறிச்சி மற்றும் வைரவம் ஆகிய ஊர்களில் உள்ள பழமை வாய்ந்த சிவ ஆலயங்களில் இன்று சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
தூத்துக்குடி மாவட்டம் கட்டாரிமங்கலம் அழகியகூத்தர் திருக்கோயில் நடராஜரின் பஞ்ச விக்ரஹ ஸ்தலங்களில் ஒன்றான கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தர் திருக்கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி பூஜை விமரிசையாக நடைபெற்றது. காலை 9 மணி முதல் ஸ்ரீ அழகியகூத்தர் அருட்பணி மன்றத்தினரால் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பகல் 11 மணிக்குச் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்குப் பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகங்கள் தொடங்கின. தொடர்ந்து பகல் 12 மணிக்குச் சிறப்புப் பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றன. வழிபாட்டைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
வரகுண பாண்டீஸ்வரர் திருக்கோயில்
சாத்தான்குளம் அருகே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளக்குறிச்சி ஸ்ரீ வரகுண பாண்டீஸ்வரர் சமேத ஸ்ரீ வாடாமலையம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மாலை 5:30 மணிக்கு அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 6 மணிக்குச் சுவாமி மற்றும் அம்பாளுக்குப் பல்வேறு மலர்களால் 1008 சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. மாலை 6:30 மணிக்குச் சிறப்பு அலங்காரப் பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வைரவம் ஞானாதீஸ்வரர் திருக்கோயில்
9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைரவம் ஸ்ரீ ஞானாதீஸ்வரர் சமேத ஸ்ரீ சிவகாமி அம்பாள் கோயிலிலும் பௌர்ணமி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. மாலை 5:30 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 6:15 மணிக்கு 1008 தாமரை மலர்களால் அம்பாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. சிறப்பு வழிபாடு: தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்குச் சிறப்பு அலங்காரப் பூஜைகள் நடத்தப்பட்டுத் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

தூத்துக்குடியில் உழைப்பாளர் தினம்: மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை!
வெள்ளி 1, மே 2026 8:09:53 PM (IST)

கொலை வழக்கு: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 1, மே 2026 8:02:02 PM (IST)

ஹெச்.எம்.எஸ். சங்கம் சார்பில் மே தின விழா!
வெள்ளி 1, மே 2026 7:39:11 PM (IST)

சட்டவிரோத மது விற்பனை: வாலிபர் கைது; 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்!
வெள்ளி 1, மே 2026 7:37:00 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 70-வது ஆண்டு திருவிழா: கால் நாட்டு விழாவுடன் பணிகள் தொடக்கம்!
வெள்ளி 1, மே 2026 7:31:49 PM (IST)









