» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஹெச்.எம்.எஸ். சங்கம் சார்பில் மே தின விழா!
வெள்ளி 1, மே 2026 7:39:11 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஹெச்.எம்.எஸ். உழைப்பாளர்கள் சங்கம் சார்பில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று ராஜாஜி பூங்கா அருகே மே தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
எச்.எம்.எஸ். மாநிலச் செயலாளர் ராஜலட்சுமி ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்டத் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். சங்கக் கொடியினை ஏற்றி வைத்த நிர்வாகிகள், அங்கிருந்த தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த உறுதிமொழியையும் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் ராதா ஆனந்தராஜ், ஒருங்கிணைப்பாளர் நிர்மல், இணைச் செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட அமைப்பாளர் பிரம்மநாயகம் மற்றும் தொகுதிச் செயலாளர்கள் மணிகண்டன், ராஜேஷ், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், இளைஞர் அணி சார்பில் ஹர்ஷவர்தன், செந்தில், சுப்புராஜ், சோமு, ராஜசேகர் ஆகியோரும், மகளிர் அணி நிர்வாகிகள் பூர்ணிகா, அஸ்வினி, அமுதா செல்வி, வேலபுஷ்பம், சந்திராமணி, மாலதி, மீரா, மிருதுளா, சரஸ்வதி ஆகியோரும் கலந்துகொண்டனர். ஓட்டப்பிடாரம் நிர்வாகிகள் குமாரசாமி, காசிராஜன், பேச்சிமுத்து, கருப்பசாமி, ராஜேஷ், பூல்பாண்டி, அரவிந்த் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவாலயங்களில் சித்ரா பௌர்ணமி விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
வெள்ளி 1, மே 2026 8:43:02 PM (IST)

தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

தூத்துக்குடியில் உழைப்பாளர் தினம்: மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை!
வெள்ளி 1, மே 2026 8:09:53 PM (IST)

கொலை வழக்கு: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 1, மே 2026 8:02:02 PM (IST)

சட்டவிரோத மது விற்பனை: வாலிபர் கைது; 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்!
வெள்ளி 1, மே 2026 7:37:00 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 70-வது ஆண்டு திருவிழா: கால் நாட்டு விழாவுடன் பணிகள் தொடக்கம்!
வெள்ளி 1, மே 2026 7:31:49 PM (IST)









