» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை: போலீஸ் ஏட்டு மீது வழக்கு!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:10:02 AM (IST)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, நோயாளிக்குத் துணையாக இருந்த இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல்துறை ஏட்டு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு காலங்கரைப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர், உடல்நலக் குறைவு காரணமாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக அவரது மனைவி மருத்துவமனையில் தங்கியிருந்தார். அதே வார்டில், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் ஏட்டு ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
நள்ளிரவு நேரத்தில், அந்த இளம்பெண்ணிடம் சென்ற போலீஸ் ஏட்டு, தனது செல்போனை சார்ஜ் செய்ய 'சார்ஜர்' உள்ளதா எனக் கேட்டுப் பேச்சுக் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதோடு, பாலியல் ரீதியான துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என அந்தப் பெண்ணிற்கு அவர் மிரட்டலும் விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் இது குறித்துத் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட போலீஸ் ஏட்டு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சீருடையில் இருந்த காவலரே மருத்துவமனையில் இத்தகைய செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவாலயங்களில் சித்ரா பௌர்ணமி விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
வெள்ளி 1, மே 2026 8:43:02 PM (IST)

தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

தூத்துக்குடியில் உழைப்பாளர் தினம்: மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை!
வெள்ளி 1, மே 2026 8:09:53 PM (IST)

கொலை வழக்கு: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 1, மே 2026 8:02:02 PM (IST)

ஹெச்.எம்.எஸ். சங்கம் சார்பில் மே தின விழா!
வெள்ளி 1, மே 2026 7:39:11 PM (IST)

சட்டவிரோத மது விற்பனை: வாலிபர் கைது; 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்!
வெள்ளி 1, மே 2026 7:37:00 PM (IST)









