» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!
புதன் 11, மார்ச் 2026 12:42:02 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 33.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் சாரல் மழை பரவலாக பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் திடீர் மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அளவு
ஸ்ரீவைகுண்டம் 33.00 மி.மீ
சாத்தான்குளம் 13.80 மி.மீ
ஓட்டப்பிடாரம் 13.00 மி.மீ
தூத்துக்குடி 7.00 மி.மீ
திருச்செந்தூர் 2.40 மி.மீ
மொத்த மழைப்பொழிவு: 72.20 மி.மீ
மாவட்டத்தின் சராசரி மழை அளவு: 3.80 மி.மீ
கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் மழை பதிவாகவில்லை. மேலும் இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு "லேசான மழை" பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தூத்துக்குடி முத்தையாபுரம், விமான நிலையம் பகுதி மற்றும் புதுக்கோட் டையில் கனமழை கொட்டியது. இன்று காலை 8 மணி வரையிலும் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் ஏராளமான உப்பளங்கள் நீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தி பாதிப்படைந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் நடைமுறைகள்: வ.உ.சிதம்பரம் கல்லூரி என்எஸ்எஸ் மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு முகாம்!
புதன் 11, மார்ச் 2026 11:32:32 AM (IST)

லாரி ஷெட் உரிமையாளர் கொலை:வாலிபர் கைது!
புதன் 11, மார்ச் 2026 11:06:16 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது: 22ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
புதன் 11, மார்ச் 2026 10:44:53 AM (IST)

தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடக்கம்!
புதன் 11, மார்ச் 2026 10:26:02 AM (IST)

தூத்துக்குடியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை? உணவகங்கள் மூடப்படும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:52:01 AM (IST)

ஸ்டூடியோ புகுந்து போட்டோகிராபரை வெட்டிய வழக்கில் ஒருவர் கைது - பார் ஊழியருக்கு வலைவீச்சு!
புதன் 11, மார்ச் 2026 8:50:33 AM (IST)








