» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை? உணவகங்கள் மூடப்படும் அபாயம்!

புதன் 11, மார்ச் 2026 8:52:01 AM (IST)

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதால், தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் எரிவாயு உற்பத்தியும் பாதிக்கப்பட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து தூத்துக்குடி மாநகர ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் செந்தில் ஆறுமுகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலால், எரிவாயு நிறுவனங்கள் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் உற்பத்தியை நிறுத்திவிட்டு, வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் உற்பத்தியை மட்டும் தொடர உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இதன் காரணமாக உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும் என முகவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறிய உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் இன்னும் சில தினங்களில் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

உணவகங்கள் மூடப்பட்டால், அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். மேலும், இந்த உணவகங்களை நம்பியுள்ள மாணவர்கள், முதியவர்கள் மற்றும் வெளியூர் வாசிகள் உணவு கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள்.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, வணிக நிறுவனங்களுக்குத் தட்டுப்பாடின்றி எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என அவர் வலியுறுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory