» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்டூடியோ புகுந்து போட்டோகிராபரை வெட்டிய வழக்கில் ஒருவர் கைது - பார் ஊழியருக்கு வலைவீச்சு!
புதன் 11, மார்ச் 2026 8:50:33 AM (IST)
கழுகுமலையில் போட்டோகிராபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியான பார் ஊழியரை தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் பழங்கோட்டை கீழத்தெருவைச் சேர்ந்த குமார் மகன் முகேஷ்கண்ணன் (28). இவர் கழுகுமலை - சங்கரன்கோவில் சாலையில் உள்ள திரையரங்கம் அருகே ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த 7-ஆம் தேதி முகேஷ்கண்ணன் ஸ்டூடியோவில் பணியில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை அரிவாளால் வெட்டியும், கம்பால் சரமாரியாகத் தாக்கியும் விட்டுத் தப்பினர். இதில் பலத்த காயமடைந்த அவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்துக் கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கழுகுமலை ஆறுமுகம் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மதன்கிருஷ்ண குமார் (23) மற்றும் கரட்டுமலையைச் சேர்ந்த பார் ஊழியர் முத்துக்குமார் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு கழுகுமலை பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த மதன்கிருஷ்ண குமாரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மதன்கிருஷ்ண குமாரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்புத் தகவல்கள் வெளியாகின. சில நாட்களுக்கு முன்பு பழங்கோட்டை மதுபானக் கூடத்தில் மது அருந்தியபோது, முகேஷ்கண்ணன் தன்னைப் பற்றியும் தனது நண்பர்கள் குறித்தும் அவதூறாகப் பேசியதாகவும், அந்த ஆத்திரத்தில் அவரைக் கடைக்குள் புகுந்து வெட்டியதாகவும் மதன்கிருஷ்ண குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொருவரான முத்துக்குமாரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!
புதன் 11, மார்ச் 2026 12:42:02 PM (IST)

தேர்தல் நடைமுறைகள்: வ.உ.சிதம்பரம் கல்லூரி என்எஸ்எஸ் மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு முகாம்!
புதன் 11, மார்ச் 2026 11:32:32 AM (IST)

லாரி ஷெட் உரிமையாளர் கொலை:வாலிபர் கைது!
புதன் 11, மார்ச் 2026 11:06:16 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது: 22ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
புதன் 11, மார்ச் 2026 10:44:53 AM (IST)

தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடக்கம்!
புதன் 11, மார்ச் 2026 10:26:02 AM (IST)

தூத்துக்குடியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை? உணவகங்கள் மூடப்படும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:52:01 AM (IST)








