» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது: 22ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு

புதன் 11, மார்ச் 2026 10:44:53 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 22,221 மாணவ மாணவியர்கள் தேர்வினை எழுதினர். 

2025-2026 ஆம் கல்வியாண்டில், இடைநிலை (பத்தாம் வகுப்பு)  பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. வருகிற ஏப்.06ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 109 தேர்வு மையங்களில்  22,221 தேர்வர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதவுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 109  முதன்மைக் கண்காணிப்பாளர்களும்,  மூன்று கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளரும்  109 துறை அலுவலர்கள்,  1280  அறைக் கண்காணிப்பாளர்கள், 129 நிலையான படையினர்,  285 சொல்வதை எழுதுபவர்,  24 வழித்தட அலுவலர்கள், 10 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 218 ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் காற்றோட்டமான தேர்வறைகள், தூய்மையான குடிநீர்வசதி, தூய்மையான கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென தரைதளத்தில் உள்ள தேர்வறைகளில் தேர்வெழுதவும் சொல்வதை எழுதுபவர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு  நடைபெறும் மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி,  காவலர் பாதுகாப்பு வசதி, தடையில்லா மின்சாரம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, தேர்வுகள் நல்ல முறையில் நடைபெற  தகுந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory