» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடக்கம்!

புதன் 11, மார்ச் 2026 10:26:02 AM (IST)



தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தின் (ஏஐசிசிடியூ) சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை தொடங்கியது.

தமிழக அரசின் அரசாணை படி 2017 முதல் நிலுவையில் உள்ள ஊதிய பாக்கியை வழங்க வேண்டும்.  தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும். தொழிற்சங்கத் தலைவர் பொன்ராஜ் மீதான பணி நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டும். 2026-ஆம் ஆண்டிற்கான குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்தி, PF மற்றும் ESI திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஏஐசிசிடியூ தூய்மைப் பணியாளர் சங்கத்தின் சார்பில் மதுரை பைபாஸ் ரோடு எப்.சி.ஐ ரவுண்டானா அருகில் சங்க அலுவலகத்தில் வைத்து மாநிலத் துணைத் தலைவர் சகாயம் தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று தொடங்கியது. இதில் நிர்வாகிகள் மின்னல் அம்ஜத், சிவராமன், பொன்ராஜ் உள்ளிட்ட பலர் பலர் கலந்துகொண்டனர். அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காணாவிட்டால், திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory