» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரி ஷெட் உரிமையாளர் கொலை:வாலிபர் கைது!

புதன் 11, மார்ச் 2026 11:06:16 AM (IST)

தூத்துக்குடியில் லாரி ஷெட் உரிமையாளர் கொலை வழக்கில் அவரது உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மச்சாது நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52). லாரி ஷெட் உரிமையாளராகத் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 4ஆம் தேதி இரவு, தூத்துக்குடி 4-வது கேட் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்குச் சென்ற அவர், தனது மற்றொரு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். 

அவர்கள் இருவரும் தூத்துக்குடி ஆதிபராசக்தி நகர் மேற்குப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த உறவினர், அங்கிருந்த மதுபாட்டிலால் ஆறுமுகத்தை தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். 

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரது உறவினராக (சித்தி மகன்) ஆனந்த் (38) என்பவரை  நேற்று கைது செய்துள்ளனர். சம்பவ நாளன்று மது அருந்திய போது தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினரை பற்றியும் அவதூறாக பேசியதால் ஆறுமுகத்தை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory