» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தல் நடைமுறைகள்: வ.உ.சிதம்பரம் கல்லூரி என்எஸ்எஸ் மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு முகாம்!
புதன் 11, மார்ச் 2026 11:32:32 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் பெண்கள் அணி சார்பில், புதுக்கோட்டை கிராமத்தில் பொதுமக்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், வட்டாட்சியர் அலுவலக வருவாய் ஆய்வாளர்கள் அந்தோணி ராஜ் மற்றும் தேவசகாயம் ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் நடைமுறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பயன்பாடு குறித்துப் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். தாமிரபரணி வடகால் பாசன நீரைப் பயன்படுத்தும் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சண்முகம் இதில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
பிற்பகல் அமர்வில், மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பேனல் வழக்கறிஞர் சுதர்சன் மற்றும் சட்ட உதவி தன்னார்வலர் பியூலா விஜயா ரூபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.பொதுமக்களுக்கான அடிப்படைச் சட்ட உரிமைகள், சமூக நீதி மற்றும் இலவசச் சட்ட உதவியைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து இதன்போது விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இரண்டாம் ஆண்டு இயற்பியல் மாணவி எம். பேச்சியம்மாள் வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக, இரண்டாம் ஆண்டு இயற்பியல் மாணவி எம். அருள் தேவி நன்றியுரை வழங்கினார். இந்த விழிப்புணர்வு முகாமினை வ.உ.சிதம்பரம் கல்லூரி NSS அணி 68-ன் திட்ட அலுவலர் ம. ஆரோக்கிய செல்வ சுந்தரி வழிநடத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!
புதன் 11, மார்ச் 2026 12:42:02 PM (IST)

லாரி ஷெட் உரிமையாளர் கொலை:வாலிபர் கைது!
புதன் 11, மார்ச் 2026 11:06:16 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது: 22ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
புதன் 11, மார்ச் 2026 10:44:53 AM (IST)

தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடக்கம்!
புதன் 11, மார்ச் 2026 10:26:02 AM (IST)

தூத்துக்குடியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை? உணவகங்கள் மூடப்படும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:52:01 AM (IST)

ஸ்டூடியோ புகுந்து போட்டோகிராபரை வெட்டிய வழக்கில் ஒருவர் கைது - பார் ஊழியருக்கு வலைவீச்சு!
புதன் 11, மார்ச் 2026 8:50:33 AM (IST)








