» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது!
வியாழன் 15, ஜனவரி 2026 8:52:39 PM (IST)
தூத்துக்குடியில் திருட்டு வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் (42) என்பவரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-3ல் நடைபெற்று வந்த நிலையில் கணேசன் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதனால் கடந்த 22.07.2024 அன்று மேற்படி நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்தையடுத்து போலீசார் தொடர்ந்து கணேசனை தேடிவந்தனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் உத்தரவின்படி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த கணேசனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: போலீசார் தீவிர கண்காணிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:39:40 PM (IST)

திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: பிப்.21-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:20:06 PM (IST)

மெட்டில்பட்டி அரசுப் பள்ளியில் வானவியல் பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:47:38 PM (IST)

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:57:55 PM (IST)

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 90-வது ஆண்டு விழா: இலவச மருத்துவ முகாம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:27:44 PM (IST)










