» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் வாலிபர் கொடூர கொலை: பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல்!

வியாழன் 15, ஜனவரி 2026 8:46:26 PM (IST)

திருச்செந்தூரில் மின் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபரை  கொடூரமாக கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஏழுமலை வாசன் (27), கூலி வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜேந்திரன் மகன் இசக்கி ராஜா (40) இவர்கள் இருவரும் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்கள். 2 பேர் வீட்டுக்கும் ஒரே மின் இணைப்பு என்பதால்2 பேரும் மின் கட்டணத்தை பகிர்ந்து கட்டுவார்களாம்.

இந்த நிலையில் மின் கட்டணம் கட்டுவதற்காக ஏழுமலை வாசன், இசக்கி ராஜாவிடம் பணம் கேட்டாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் நேற்று இரவு ஏழுமலை வாசன் இசக்கி ராஜா வீட்டுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விட்டாராம். இதையடுத்து இன்று இசக்கிராஜா மின் இணைப்பு எப்படி துண்டிக்கலாம் என்று ஏழுமலை வாசனிடம் தகராறு செய்தாராம். 

அப்போது ஆத்திரமடைந்த இசக்கி ராஜா, ஏழுமலை வாசனை சரமாரியாக கத்தியால் குத்தினாராம். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். 

இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, இசக்கி ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் தனது வீட்டில் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடிய ஏழுமலை வாசன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory